டி20 உலக கோப்பையில் ரிஷப் பன்ட்டிற்கு இடம்: கவாஸ்கர் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: “நான் கேஎல்.ராகுலை முழு நேர விக்கெட் கீப்பராக பார்க்கிறேன். அதற்கு முன் நான் ஒன்றை சொல்கிறேன், ரிஷப் பன்ட் ஒரு கால் குணமடைந்து இருந்தால் கூட, அவரை நேராக நான் தேர்வாளராக இருந்தால் அணிக்கு தேர்வு செய்வேன். காரணம் தனி ஆளாக அவரால் எந்த வடிவத்திலும் ஆட்டத்தை மாற்ற முடியும். எனவே அவரை உலககோப்பைக்கு தேர்வு செய்யவேண்டும்.

இருப்பினும் ரிஷப் பன்ட் கிடைக்கவில்லை என்றால் கேஎல்.ராகுலை விக்கெட் கீப்பராக வைத்தால் நன்றாக இருக்கும். அவரை முதலில் அணிக்கு தேர்வு செய்து, பின்பு துவக்க ஆட்டக்காரர் ஆகவோ மிடில் வரிசையிலோ அல்லது பினிஷர் ஆகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அவர் ஒரு ஆல் ரவுண்டராக இந்திய அணிக்கு தரமான விக்கெட் கீப்பராக கிடைத்திருக்கிறார். இன்னொரு பக்கத்தில் ஜிதேஷ் சர்மா பந்தை அடித்து விளையாட கூடியவராக இருக்கிறார். இப்படி வீரர்களுக்கிடையே நல்ல போட்டி இருப்பது நல்ல விஷயம், என தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி