டி20 உலகக்கோப்பை: 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி

டிரினிடாட்: டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 149 ரன் எடுத்தது. 150 ரன் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 136 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதை டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ரூதர்ஃபோர்ட் 68 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக போல்ட் 3 விக்கெட்டுகளையும், சவுதி, ஃபெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய அந்த அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக க்ளென் ஃபிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை அள்ளினார். ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தடுத்தி பெறாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு

தேசிய பேரிடர் மீட்பு படைக்கு 40 சதவீத ரிஸ்க் அலவன்ஸ்: அமித் ஷா அறிவிப்பு