2024ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரில் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்?

நியூயார்க்: 2024ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலககோப்பைக்கான அட்டவணை இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 4ம்தேதி முதல் 30ம் தேதி வரை தொடர் நடைபெறும் என தெரிகிறது. தலா 10 அணிகள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படும். அரையிறுதி, பைனல் உள்பட மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஒரே பிரிவில் இடம்பெறும் என தெரிகிறது. பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் இரவாக இருந்தாலும் இந்திய ரசிகர்களை கவரும் வகையில் மாலையில் நேரத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு