டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி ஆகியோ உள்ளனர்.

4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து இந்திய அணி தடுமாறியுள்ளது. கடந்த போட்டிகளில் சுமாராக விளையாடிய விராட் கோலி 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ககிசோ ரபாடா பந்து வீச்சில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்..

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.பவர்ப்ளேயான 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளனர். ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்துள்ளனர். பவர்ப்ளேயில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.4 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த விராட் கோலி – அக்சர் படேல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தற்போது வரை இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அக்சர் படேல் ரன் அவு முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

4 ஆவது விக்கெட்டிற்கு அக்சர் படேலும் – விராட் கோலியும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அலட்சியத்தால் அக்சர் படேல் விக்கெட்டை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் 50 ரன்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.

18 ஆவது ஓவரில் 16 ரன்கள் ககிசோ ரபாடா வீசிய 18 ஆவது ஓவரில் இந்திய அணி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்துள்ளது.18.3 ஓவர்களில் விராட் கோலி – ஷிவம் துபே இணை 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர்.

யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 59 பந்துகளில் 2 சிக்சர் – 6 பவுண்டரியுடன் 76 ரன்க்ள எடுத்தார் விராட் கோலி. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது