டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? டேவிட் மில்லர் விளக்கம்

கேப்டவுன்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக இறுதிபோட்டிக்கு தகுதிபெற்ற தென்ஆப்ரிக்கா அணி, அதில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இதனால் வீரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே அந்த அணியின் மிடில் ஆர்டர் அதிரடிபேட்டரான 35 வயதான டேவிட் மில்லர் டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது.

நேற்று இரவு டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அவருடைய பெயரில் அறிக்கை ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் “ தனது ஓய்வு குறித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். என்னுடைய சிறந்தது இன்னும் வரவில்லை இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருக்கிறார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது