சீனாவுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகம் 8 மாதமாக காவலில் இருந்த புறா விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிபட்டது. இந்த புறாவின் கால்களில் இரண்டு மோதிரங்கள் இருந்தன. இதில் ஒன்று தாமிரத்திலும் மற்றொன்று அலுமினியத்திலும் ஆனது. பறவையின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியிலும் சீன மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்தது. இதனை தொடர்ந்து புறா உளவு பார்ப்பதற்காக வந்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. ஆர்சிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிடிபட்ட புறா மும்பை கால்நடை மருத்துவமனையில் கூண்டில் அடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் பிடிபட்டது தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து புறா உளவு பார்ப்பதற்காக வந்தது என்ற சந்தேகம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் அனுமதி கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. போலீசார் அனுமதி அளித்ததை அடுத்து 8 மாதங்களுக்கு பின் புறா நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!