உச்ச நீதிமன்றத்துக்குள் செல்லும் இ-பாஸ் பெற ‘சுஸ்வாகதம்’ போர்ட்டல் தொடக்கம்: தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கும் இ-பாஸ் பெற ‘சுஸ்வாகதம்’ என்ற இணையதளம் தொடங்கப்படும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று கூடியது. அப்போது, “வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைய இ-பாஸ்களை பெற உதவும் ‘சுஸ்வாகதம்‘ இணையபக்கம் தொடங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

‘சுஸ்வாகதம்’ இணைய அடிப்படையிலான மற்றும் மொபைல் நட்பு பயன்பாடு. இது நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பது, வழக்கறிஞர்களை சந்திப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இ-பாஸ்களை கோருகிறது. 2023 ஜூலை 25 முதல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த இணையபக்கத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 10,000க்கும் மேற்பட்ட இ-பாஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்