உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் புதிய நீதிபதியாக அனிருத்தா போஸ் நியமனம்

புதுடெல்லி: நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பில் புதிதாக நீதிபதி அனிருத்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை குடியரசு தலைவர் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில், கொலீஜிய அமைப்பில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடந்த சில தினங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த இடத்திற்கு நீதிபதி அனிருத்தா போஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு கொலீஜியம் அமைப்பில் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வரையில் பதவியில் இருப்பார். புதிய நீதிபதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் அனிருத்தா போஸ் ஆகிய ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி