உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்பான அனைத்து வழக்குகளையும் கையாளும் விதமாக உச்ச நீதிமன்றத்துக்கு என்று தனித்தனி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வழக்கறிஞர்கள் டி.குமணன் மற்றும் சபரீஷ் சுப்ரமணியன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது காவிரி நீர் பங்கீடு, மின்சாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை கையாண்டு வரும் வழக்கறிஞர் டி. குமணன் கூடுதல் முக்கிய பொறுப்பாக தமிழ்நாடு விஜிலன்ஸ் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் கையாள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நீட் தேர்வு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியனுக்கு தமிழ்நாட்டின் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை தொடர்பான வழக்குகளை கையாள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி