உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பொதுநலன் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட முந்தைய யூடியூப் வீடியோக்கள் ஹேக்கர்களால் திடீரென நேற்று முடக்கப்பட்டன. மேலும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் க்ரிப்டோ கரன்சி தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளதோடு, அந்த பக்கமும் ஹேக் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் வழக்கின் நேரலையும் பாதிக்கப்பட்டது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்