வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் பா.வளர்மதி கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது கணவர், மகன்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2012ல் அனைவரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்ந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதுதொடர்பான வழக்கை வரும் 5ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் தொடர் விசாரணைக்கு எடுக்கவுள்ளதால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வளர்மதி தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு