ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல்.. சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள்!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பு அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பொது நலன் வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் யூடியூப் பயன்படுத்துகிறது. அண்மையில் நடைபெற்ற கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரணக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் அதனை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பியது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிப்பிள் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!

ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்