உச்ச நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு மேல்முறையீடு

புதுடெல்லி: கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 76 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரையும் கடந்த 2022ம் ஆண்டு, வில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரித்து தீர்ப்பை ரத்து செய்ததுடன், வழக்கை வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது; கமலா ஹாரிசுடன் 2வது விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் : தோல்வி பயத்தில் பின்வாங்குகிறாரா டொனால்ட் டிரம்ப்

வேலூரின் கீரை கிராமம்!

உடலுக்கு வலுவூட்டும் பிச்சாவரை!