வங்கதேசத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சையத் ரெபாஸ் பதவி ஏற்பு

டாக்கா: வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சையத் ரெபாஸ் நேற்று பதவி ஏற்றார். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக வங்கதேச நீதித்துறையை மறுசீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் நேற்று முன்தினம் பதவி விலகினார்.

இந்நிலையில் வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சையத் ரெபாஸ் அகமது பதவி ஏற்றார். நேற்று மதியம் அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சையத் ரெபாஸ் அகமதுக்கு அதிபர் முகமது சஹாபுதின் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

‘வடதிருநள்ளாறு’ என்று அழைக்கப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு