மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் போலீசில் புகார்

திருவள்ளூர்: மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுதிறனாளி அமைப்பினர் அளித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற பெயரில் பேசவந்த பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், மாற்றுதிறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சமுக வலைதளங்களிலும், சமுக ஆர்வளர்களும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவர்மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். அதேபோல குமர்நகர் காவல்நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சம்பந்தபட்ட காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை திருவெற்றியோரை சேர்ந்த சரவணன் என்பவர் மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பேச்சாளர் மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். அவர்மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் காவல்துறை உயர் அதிகாரிகள் அலோசனை நடத்திவருகின்றனர்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு