சூப்பர் கிங்சை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் தகுதி

ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்ரிக்கா டி.20 (எஸ்ஏ20) 2வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் ஜோகன்ன்னஸ்பர்க்கில் நேற்று இரவு நடந்த 25வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 15.2 ஓவரில் 78 ரன்னுக்கு சுருண்டது. டேனியல் வோரால், பேட்ரிக் க்ரூகர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய சன் சரைசர்ஸ் அணியில் ஜோர்டான் ஹெர்மன் 11 ரன்னில் அவுட்டாக, டேவிட் மாலன் 40, டாம் ஆபெல் 26 ரன் அடித்தனர். 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8 போட்டியில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ரத்து என 24 புள்ளியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு