ஐபிஎல் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத்ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் 2 போட்டியில் தோல்வி கண்ட சன்ரைசர்ஸ் அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் கடைசி 2 போட்டியில் தோல்வியடைந்தது. 6 போட்டியில் 2 வெற்றி, 4தோல்வி கண்டுள்ள நிலையில் இன்று சொந்த ஊரில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் இறங்குகிறது.

மறுபுறம் வார்னர் தலைமையிலான டெல்லி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் கடைசி போட்டியில் கொல்கத்தாவை சாய்த்த உற்சாகத்தில் களம் காண்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதி உள்ளன.

இதில் 11ல் ஐதராபாத், 10ல் டெல்லி வென்றுள்ளன. கடந்த சீசனில் மோதிய ஒரே போட்டியில் டெல்லி வென்றது. ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் இதுவரை ஆடி உள்ள 47 போட்டியில் 30ல் வென்றுள்ளது. 16ல் தோல்வி கண்டுள்ளது. ஒருபோட்டி டையில் முடிந்துள்ளது.

இரு அணிகளும் புள்ளிபட்டியலில் கடைசியில் உள்ளதால் வெற்றிக்காக வரிந்துகட்டும் என்பதால் இந்தப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்