மூலவரை தரிசித்த சூரிய பகவான்

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் முழுமையாக மூலவரான காசி விஸ்வநாதர் மீது விழுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மகாளய அமாவாசை தினமான இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிவரை சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் காசி விஸ்வநாதர் மீது முழுமையாக விழுந்தது.

இதனை சூரிய அபிஷேகமாக நினைத்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மகள்களுடன் சுவாமி தரிசனம்