சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை டெல்லி- சண்டிகர் சாலையில் விவசாயிகள் போராட்டம்

குருஷேத்ரா: அரியானா அரசு சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 6ம் தேதி அவர்கள் ஷாஹாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலை -44 ல் மறியல் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீசார் தடியடி மற்றும தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை கலைத்தனர். இந்நிலையில் பாரதிய கிசான் சங்கம் சார்பாக மகாபஞ்சாயத்து கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பிபிலி சந்தையில் நடந்த இந்த கூட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் டெல்லி- சண்டிகர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு வழங்க வேண்டும் மற்றும் ஷாஹாபாத் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை