நான் முதல்வன் திட்டத்தில் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ‘சிகரம் தொடு திட்டம்’: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நான் முதல்வன் திட்டம் மூலம் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்காக ‘சிகரம் தொடு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும்.

அரசின் முக்கிய திட்டங்களக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும். வேலைவாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு ‘திறன் ஓலைகள்’ மற்றும் பணியிடப் பயிற்சி வழங்கும் ‘திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள்’ என்ற திட்டம் ரூ100 கோடியில் செயல்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர ‘சிகரம் தொடு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நமது திராவிட மாடல் அரசின் முக்கிய குறிக்கோளான 2030ல் ஒரு டிரில்லியன் அமெரிக்கன் டாலர் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே, பெண்கள் முறைசார்ந்த தொழில்கள் மற்றும் உயர்தர பணிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும். இதற்காக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்ததாண்டு முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ1185 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இவ்வாண்டு ரூ168 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது