வெயில் பாதிப்பு எதிரொலி: தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: வெயில் பாதிப்பு காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை நிறுவனங்கள் மாற்றியமைப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா கடிதம் எழுதியுள்ளார். சுரங்க பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய குடிநீர் மற்றும் ஓய்வு எடுக்க தற்காலிக அறைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலைபளு அதிகம் வழங்கக் கூடாது என்பதை உறுதி செய்ய்வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் அவசர கால ஐஸ் பேக், வெப்பநோய் தடுப்பு மருந்துகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்