ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்படுகிறது.!

சென்னை: ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட தொடங்கியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரம் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3வது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4வது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தன.

இதையடுத்து, ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது. மே மாதம் முழுவதும் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்றுமுதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு