கோடை உழவு… கோடி நன்மை தரும் !

கோடை காலம் என்பது மனிதர்கள் மட்டுமல்ல… நிலங்களும் ஓய்வெடுக்கும் காலம். அடுத்த சாகுபடிக்கான முன்னேற்பாடுகளையும் விவசாயிகள் செய்து கொள்வர். அவற்றில், முக்கியமானது கோடை உழவு. குறிப்பாக, நெல் சாகுபடிக்கு கோடை உழவு பல வகைகளிலும் உறுதுணையாக அமைகிறது. அதே போல மானவாரி நிலத்திற்கும் நல்ல பலனை தரும்.

*தைப்பட்டத்தில் நெல், மணிலா, காய்கறி, கொடி வகை பயிர்களை விளைவித்து அறுவடையை முடித்த காலமாக ஏப்ரல், மே மாதங்கள் இருக்கும். இந்த மாதங்களில் பெரும்பாலான வயல்கள் விளைச்சல் ஏதுமின்றி சும்மா கிடக்கும். அதிலும் வானம் பார்த்த பூமியெல்லாம் சூரிய வெப்பத்தால் சுட்டு பொசுக்கிய நிலையில் இருக்கும். இந்த சமயத்தில் உழவு ஓட்டினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

*ஏப்ரல், மே மாதங்களில் நன்றாக ஆழ உழ வேண்டும். இதன்மூலம் நிலத்தில் உள்ள மேல்மண் கீழாகவும், கீழ்மண் மேலாகவும் செல்லும். மேலும் மண் இளகி பொலபொலவென்று இருக்கும். இந்த பொலபொலப்புத்தன்மையால் கோடையில் பெய்யும் மழை, அதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் பெய்யும் பருவமழையின் நீரை மண் அப்படியே உறிஞ்சி கீழே செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். கோடை உழவு செய்றப்போ மண்ணுக்குள்ள மறைஞ்சு இருக்குற, கூட்டுப்புழுக்கள் எல்லாம் வெளியில் வந்து, சூட்டில் செத்துவிடும்.

*தைப்பட்டத்தில் விளைவித்த பயிர்களின் மிச்சங்கள், அதாவது தண்டு, வேர் உள்ளிட்டவை உழவு மூலம் பெயர்த்தெடுக்கப்பட்டு, மண்ணிற்குள் மேலும் கீழுமாக செலுத்தப்படும். அவை அப்படியே மட்கி மண்ணுக்கு உரமாகும். துவரை போன்ற பயிர்களின் அடிக்கட்டைகள் நிலத்தில் நின்று உழவர்களுக்கு பல்வேறு இன்னல்களை உருவாக்கும். கோடை உழவு மூலம் அந்த கட்டைகள் எளிதாக பெயர்க்கப்படும்.

*மழைபெய்தால் மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும். கோடை உழவு மூலம் மண்ணை பொலபொலப்பாக்கினால் நீர் உறிஞ்சப்பட்டு, மண்ணரிப்பு தடுக்கப்படும். குறிப்பாக மண்ணில் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும். இதனால் அடுத்த பட்டத்திற்கு நிலம் நன்றாக தயாராகும்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது