கோடையை சமாளிக்கும் குளு குளு மாய்ச்சுரைசர்கள்!

கோடைக் காலத்தில் சூரியனில் இருந்து அதிகப்படியாக வரும் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தை குளிர்ச்சியாக வைப்பது முக்கியமானது. இதற்கு மாய்ஸ்சுரைசர் உதவும். ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்றவகையில் பக்கவிளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.

கிரீன் டீ மாய்ஸ்சுரைசர்

தேவையானவை: கிரீன் டீ – 3 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன், கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன், தேன் மெழுகு – 3 டீஸ்பூன், கிரீன் டீ எசன்ஷியல் எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன், மெழுகு இரண்டையும் கலந்து கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும் வரை கலந்து குளிர் சாதன பெட்டியில் குளிர வைக்கவும். கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வெயிலால் வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.

குங்குமப்பூ மாய்ஸ்சுரைசர்

தேவையானவை: குங்குமப்பூ – 1 டீஸ்பூன், பனீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு – 4, கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன், கிளிசரின் – 1 டீஸ்பூன், வைட்டமின் ஈ எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை: ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி சிறிது பனீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி குமிழில் வைக்கவும். குங்குமப்பூ வெயிலால் ஏற்படும் சிறுசிறு கட்டிகளை குணமாக்கும். சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நிரோற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.

செம்பருத்தி மாய்ஸ்சுரைசர்

தேவையானவை: செம்பருத்தி பூ தூள் – 2 டீஸ்பூன், ரோஜா பொடி – 1 டீஸ்பூன், கற்றாழை ஜெல் – டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை: சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும். வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.

– அ.ப. ஜெயபால்

பிணிகளைத் தீர்க்கும் பிஞ்சுகள்!

*கத்தரிப் பிஞ்சு: கரலின் இனிமையை வளம்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும்.
*மாதுளம் பிஞ்சு: வயிற்றுப் போக்கை நிறுத்தும். சீரண சக்தியைப் பெருக்கும்.
*வாழைப் பிஞ்சு: வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
*பலாம் பிஞ்சு: பித்த நோய்களைத் தீர்க்கும்.
* அத்திப் பிஞ்சு: எல்லா வகையான மூல நோய்களையும் போக்கும்.
*முருங்கைப் பிஞ்சு: தாதுவைப் பெருக்கும். கண்களுக்கு இதமளிக்கும்.
* மாம்பிஞ்சு: கப நோய்களை தீர்க்கும். வாந்தியைக் கட்டுபடுத்தும்.
*நார்த்தை பிஞ்சு: சீரணத்தை மேம்படுத்தும். குடலை சுத்தப்படுத்தும்.
*அவரை பிஞ்சு: கண் நோய்களைத் தீர்க்கும். மத்திய உணவிற்கு ஏற்றது.
*வெள்ளரி பிஞ்சு: நீர்க் கடுப்பு நீக்கம். உடல் சூட்டைத் தணிக்கும்.
– நெ. இராமகிருஷ்ணன்

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!