கூடலூர் ஏழுமுறம் பழங்குடியின மாணவர்களுக்கு கோடை கால கல்வி சுற்றுலா

 

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமுறம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் ஆல் த சில்ரன் அமைப்பு சார்பாக மாலை நேர பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு படம் வரைதல்,பேச்சாற்றல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குவதோடு தற்காப்பு கலையான சிலம்ப பயிற்சியும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இயற்கை விவசாயம் மற்றும் மூலிகைகள் அறிந்து கொள்ளுதல் குறித்த கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. முதற்கட்டமாக ஏழுமுறம் பகுதியில் இயற்கை விவசய முறைகளை குறித்து மாணவர்களுக்கு களப்பணி அழைத்து சென்று கட்டப்பட்டது.தொடர்ந்து கூடலூர் நாடுகாணி பகுதியில் உள்ள தாவர மரபியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,மாலை நேர பள்ளி ஆசிரியர் பிரியங்கா ஆகியோர் மாணவர்களுக்கு ஜீன்பூல் மரபியல் மையத்தில் உள்ள கண்காட்சி அரங்குகளில் மீன் வகைகள்,பாம்பு வகைகள்,மர வகைகள்,மூலிகை செடிகள்,ெபரணி வகைகள் வளர்ப்பு முறைகள் குறித்தும் விவசாய முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும் சூழல் மேம்பாட்டில் பங்களிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்