கோடை சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா

ஊட்டி: குன்னூர் காட்டேரி பூங்கா கோடை சீசனுக்காக தயாராகி வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து செல்கின்றனர். இதில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால், அவர்களை மகிழ்விக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும்.

ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். அவை ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை சீசனுக்காக தோட்டக்கலைத் துறையினர் அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணி நடந்து வருகிறது. தற்போது பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவங்கியுள்ளது. இதில், காட்டேரி பூங்காவில் மலர் செடி நடவு செய்வதற்காக பாத்திகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு