பலத்த இடி,மின்னலுடன் கோடை மழை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மாலை பலத்த இடி-மின்னலுடன் கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டியெடுத்து வருகிறது. நண்பகல் வேளையில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. போச்சம்பள்ளி பகுதியில் கடுமையான வெயிலின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் பயங்கர இடி- மின்னலுடன் கோடை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடை மழை மானாவாரி பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்