கோடை விழா முடிந்தாலும் கொடைக்கானல் ஹவுஸ்ஃபுல்

கொடைக்கானல்: கோடை விழா நிறைவு பெற்ற பின்னரும், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. வழக்கமாக கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நிறைவு பெற்ற பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகை கொடைக்கானலுக்கு குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கோடைவிழா நிறைவு பெற்ற பின்னரும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வழக்கமாக வார இறுதி நாட்களில் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வார்கள். வார நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருக்கும். தற்போது தரைப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதாலும், கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளதாலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொடைக்கானலுக்கு நேற்று அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு