அமிர்தசரஸ்: சிரோமணி அகாலிதள தலைவராக சுக்பீர்சிங் பாதல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரான சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தள தலைவராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீக்கிய மத கோட்பாடுகளை அவமதித்ததாகவும் மத நிந்தனை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மத வழக்கப்படி அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதையும் ஏற்று கொண்டு குருத்வாராவில் பணியாற்றினார். இந்த நிலையில், அகாலி தள கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement


