முன்விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்திற்கு தீ வைப்பு: மூன்று பேர் மீது வழக்கு பதிவு

திருத்தணி: முன்விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல்(63). இவருக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மர்மமான முறையில் முனிவேலின் கரும்பு தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கரும்புகள் தீயில் கருகி நாசமாகியது.

இது குறித்து முனிவேல் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, பூபதி, கன்னியப்பன் ஆகியோர் 3 பேர்தான் முன்விரோதம் காரணமாக தனது கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்துள்ளனர் என கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்