போதிய ஆதாரங்கள் இல்லாததால் சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை: வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர்: சொத்துகுவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இதில் 172 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி வசந்த லீலா தீர்ப்பளித்தார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி