தங்கம் விலை திடீர் மாற்றம்: பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,168க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. 25ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து ஒரு பவுன் ரூ.44,160க்கு விற்கப்பட்டது. 26ம் தேதி பவுன் ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.44,040க்கும், 27ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது. 29ம் தேதி மட்டும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது. செப்.30ம் தேதியும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு தொடர்ந்து நீடித்து செப்.30ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.42,880க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5295-க்கும் -சவரன் ரூ.42,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 -காசுகள் உயர்ந்து-ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையிலும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு