குற்றாலம் மெயினருவியில் குளித்த கட்டிட தொழிலாளி திடீர் சாவு

தென்காசி : குற்றாலம் மெயினருவியில் குளித்துவிட்டு திரும்பிய புளியங்குடியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
குற்றாலம் மெயினருவியில் நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தனக்கு தலை சுற்றுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை அமரவைத்த போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சில் மருத்துவக்குழுவினர் வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதனிடையே அவரது படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதில் இறந்தவர் புளியங்குடியைச் சேர்ந்த கொத்தாளம்‌ (60) என்பதும், கட்டிடத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை