செங்குன்றத்தில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி: எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

புழல்: செங்குன்றத்தில், பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டு படிக்கும் 358 மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் வைலட் மேரி இசபெல்லா, பள்ளி உதவி தலைமை ஆசிரியை முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு 358 மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் சரவணன், பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் விப்ர நாராயணன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு