சூடானில் வெள்ளப்பெருக்கு; அணை உடைந்து 60 பேர் பரிதாப பலி: 200க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

அர்பாத்: சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து 60 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கதி குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் ஏற்கனவே கடந்தாண்டு ஏப்ரல் முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகிறது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில், தற்போது பெய்து வரும் கனமழையால் மேலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வெள்ளத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செங்கடல் அருகே உள்ள அர்பாத் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணையானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 20 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும், 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அர்பாத் அணை 25 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்டது. சூடானின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கடற்கரை நகரம் இருந்தது. இப்போது அர்பாத் அணை அடித்து செல்லப்பட்டதால், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. தங்கச் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 150 முதல் 200 பேர் வரை காணவில்லை. சூடானில் அணைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு