பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. புகார் குறித்து பள்ளியில் மாணவிகளிடம் கேட்டறிந்த போது கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வதாக சில மாணவிகள் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் இரு ஆசிரியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சக பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை குறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் பிரேம் குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இப்பள்ளியில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற குற்றசாட்டுகள் எதுவும் எழுந்ததில்லை. எனவே இருவரையும் உடனடியாக பணிக்கு திரும்ப செய்ய வேண்டும். மேலும் அவர்களை ஆசிரியர்களை நியமித்து நாளை முதல் பாடங்களை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளில் சாலை மறியல் போராட்டத்தால் ஆவடி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை