சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

சென்னை: சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும். தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், இந்தாண்டு தமிழ் பாட தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும்” எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது.

 

Related posts

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்

அருமனை அருகே பரபரப்பு; இரவு முழுவதும் தண்ணீருக்கு நடுவே பாறையில் உறங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து ஊரெல்லாம் தேடிய தீயணைப்புத்துறையினர்