மாணவர்களுக்கு பரிவட்ட மரியாதை!

சென்ற வாரம் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த மீம்கள், வீடியோக்கள் என எங்கும் டிரெண்டிங்கில் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளி நாள். கொண்டு வந்து விட்டுச் சென்ற அம்மாவை நோக்கி கதறி அழுது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ‘எம்மா போகாதீங்க‘ எனக் கத்தியது வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தேனி மாவட்டம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிவட்டம் கட்டி, ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்று உற்சாகமாக பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருபக்கம் மதம் சார்ந்த எண்ணங்களை இது வளர்க்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்கருத்து தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம் சிறு குழந்தைகள் பள்ளிச் சீருடையுடன் தலையில் பரிவட்டம், கையில் கலசம், சகிதமாக நடந்து வரும் வீடியோ பலராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

Related posts

மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜி வழக்கு 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி அபு சலீம் நாசிக் சிறைக்கு மாற்றம்