பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் 15 பேர் காயம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு அப்பகுதிகளை சேர்ந்த 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. வேனை நடுவலூரை சேர்ந்த டிரைவர் உதயகுமார் (57) ஓட்டி வந்தார்.

வளையமாதேவி அடுத்த பனந்தோப்பு பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் ஆசிரியை சுமதி மற்றும் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.அப்பகுதியினர் வந்து அனைவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்ஆப்ரிக்கா பைனலில் இந்தியா பேட்டிங் தேர்வு