மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வி சுற்றுலா!

கோவை காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னார்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியை தரம் உயர்த்தியபோது, 200க்கும் குறைவான மாணவர்களே படித்துவந்தனர். இதை அறிந்த சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஞானசேகரன், பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். கடந்த, 2019ம் ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இடையில் இரண்டு ஆண்டுகள் கொரோனா வந்ததால் இந்த கல்விச் சுற்றுலாப் பயணம் தடைபட்டது.கடந்த, 2022ம் ஆண்டு மீண்டும் கல்விச் சுற்றுலாப் பயணத்தை தொடங்கி, மாணவர்களுடன் பெற்றோர்களையும், விமானத்தில் உடன் அழைத்துச் சென்றனர். இதையடுத்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 400ஐ எட்டியுள்ளது. கடந்த வாரம் ஒரு பேட்ச் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள், கோவையில் இருந்து விமானத்தில் சென்னை சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்த பின், ரயில் மூலம் கோவை வந்தடைந்தனர். இந்த பயணம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை