புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸில் மாணவர்கள் பயணிக்கலாம்

சென்னை: புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பஸ் பாஸ் வழங்க முடியாது என்பதால் மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணம் செய்யலாம். மாணவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது

மக்கள் குரலாக ஒலிக்கிறது

8 மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்