சென்னை: திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவது கண்டு மகிழ்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் எனப் பெருமை கொள்ளும் ஒளிநிறைந்த நாளை நம் இளைஞர்களுக்காக. தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு, மாணவர்களின் திறன் வளர்க்கும் திராவிட மாடல் அரசு என்றும் முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.