மாணவர்களுக்கு எடப்பாடி அட்வைஸ் டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை

சென்னை: டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்று மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துள்ளார். டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. குறைந்தபட்சம் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பல இணையான படிப்புகள் உள்ளன. எனவே, நீட் நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் தங்களது இன்னுயிரை போக்கிக்கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் என்று மாணவ செல்வங்களைகேட்டுக்கொள்கிறேன்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!