மாணவிக்கு வளைகாப்பு ஆசிரியை சஸ்பெண்ட் தலைமையாசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

வேலூர்: வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவது போன்று ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோ கடந்த சில நாட்களாக வைரலானது. இந்தசம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்பேரில், பள்ளி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியை பிரேமா, மற்றும் வகுப்பு ஆசிரியைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

Related posts

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது