பாம்புகளை கூண்டில் அடைத்து யூடியூபில் விற்பனை செய்த மாணவர் கைது

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் அருகே திருவிச நல்லூரை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் (25). கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா பாடப்பிரிவில் முதுகலை படித்து வரும் இவர், அரியவகை பாம்புகளை பிடித்து அடைத்து வைத்து அவற்றை விற்பதாக யூடியூபில் பிரசாரம் செய்தார். இதையடுத்து கும்பகோணம் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அவரது வீட்டின் எதிர்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் 4 அடி நீளம் உள்ள அரியவகை மண்ணுளி, நல்லபாம்பு, கண்ணாடி விரியன், பட்டியலிடப்பட்ட விலங்கினங்களான மரநாய், உடும்பு, கீரிப்பிள்ளை, தவிட்டுக்குருவி, கிளி ஆகியவை கூண்டுகளில் அடைத்து வைத்திருந்ததும், அதனை விற்பதற்காக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சதீஷ்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை