மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை: தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு

தர்மபுரி: தொப்பூர் அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29), கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, கடந்த 2017ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மாணவியை மிரட்டி உள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாரியப்பன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ₹35 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பு கூறினார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்