சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் உயிரிழந்த விவகாரம்: போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சுந்தர் பிரசிடண்சி கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முன்விரோதம் காரணமாக மறைத்து வைத்திருந்த பட்டா கத்திகளை வைத்து சரமாரியாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரயில்நிலையங்கள் முழுவதும் சி.சி.டிவி இருப்பதால், டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்த நிலையில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்,

*பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு. மின்சார ரயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு

*சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு. ரயில்களில் இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளும் ஆய்வு

*இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

*ஏற்கனவே இவ்வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

 

Related posts

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 83 பேர் தேர்வு : பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி