முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கொலைக்கு நீதி வழங்கக் கோரி ஜூனியர் டாக்டர்கள் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் மம்தா பானர்ஜி, டாக்டர்களின் 5 கோரிக்கைகளில் மூன்றை நிறைவேற்றினார். போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் சுகாதார அதிகாரிகள் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து நாளை முதல் தங்கள் போராட்டத்தை ஓரளவுக்கு நிறுத்திக் கொள்வதாக ஜூனியர் டாக்டர்கள் நேற்றிரவு அறிவித்தனர். சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பாக நடக்கும் உள்ளிருப்பு போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளும் டாக்டர்கள், நாளை முதல் அவசரகால மருத்துவ பணிகள் மற்றும் வெள்ள பாதிப்பு மருத்துவ பணிகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

ஒருவாரத்தில் தங்களின் அனைத்து கோரிக்கையையும் மம்தா அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை புறநோயாளிகள் பிரிவில் பணியாற்ற மாட்டோம் என்றும் கூறி உள்ளனர். இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷின் மருத்துவ பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது