ஒன்றிய அரசை கண்டித்து பிப்.16ல் வேலைநிறுத்தம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முடிவு

சென்னை: சென்னை தொமுச தலைமை அலுவலகமான கலைஞர் அரங்கத்தில், போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொமுச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில் மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் வரும் பிப்.16ம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை நீக்குதல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை கணிசமாக குறைத்தல், அனைவருக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி