என்எல்சி நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம்..!!

நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடந்த 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எல்.எல்.சி இந்திய நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் ஒன்று விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியக்கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி பணி நிரந்தரம் செய்ய கோரியும், நிரந்தரபடுத்தும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் 50 ஆயிரம் வழங்க கோரியும், என்எல்சிக்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்க கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், என்எல்சி நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற என்எல்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் காரணமாக அன்றாட செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக பீதி மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது. போராட்டக்காரர்களை என்எல்சி வழங்கும் 4 இடங்களுக்கு செல்ல ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்.எல்.சி நிர்வாகம் கடிதம் எழுதியிருக்கிறது.

Related posts

ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா

பீகார் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு